×

‘நான் முதல்வன்’ திட்ட மாணவர்களுக்கான சிறந்த பயிற்சிக் களம்: இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் திறன்மிகு மையம்

சென்னை: இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு அரசால் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையம் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் உலகின் முன்னணி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான சீமென்ஸ் உடன் இணைந்து சென்னை டைட்டில் பூங்காவில் திறன்மிகு மையத்தை நிறுவியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டு.

ஓராண்டு கடந்துள்ள இந்த மையத்தில் நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்கள் உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் துறைசார் திறனை வளர்த்து வருகின்றனர். மென்பொருள் செயற்கை நுண்ணறிவு ஆட்டோ மொபைல் உட்பட பல துறைகளை சேர்ந்த 800 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் திறன்மிகு மையத்தின் மூலம் குறைந்த பணத்தில் உயர்ந்த தொழில்நுட்பங்களை பெற்று உற்பத்தியை அதிகரித்ததுடன் வேலை வாய்ப்புகளையும் பெருகியுள்ளன. கிரானைட், மார்பில் கர்கள் மற்றும் காலனி உற்பத்தியில் மென்பொருட்களின் பங்குடன் காலவிரையத்தை தவிர்த்து உற்பத்தியை பெருக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது போன்று பல தொழில் நிறுவனங்களும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உற்பத்தியை பெருக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க திறன்மிகு மையத்தை நாடி வருகின்றனர். ரிவெர்ஸ் இன்ஜினியரிங் தொழில்நுட்ப உதவியுடன் 3D பிரின்டிங் மூலமாக இயந்திரங்களின் வடிவமைப்பு மற்றும் பழுது நீக்கம் உள்ளிட்டவற்றை கற்று தரும் நிபுணர்கள் வி.ஆர் தொழில்நுட்பத்தை மருத்துவ சிகிச்சை மார்பக புற்று நோய் விழிப்புணர்வு போன்றவற்றில் பயன்படுத்தியும் கற்பித்து வருகின்றனர். தொழில் வளர்ச்சி மாணவர்களின் எதிர்காலம் என தொலைநோக்கு பார்வையோடு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட திறன்மிகு மையம் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கி வருகிறது.

The post ‘நான் முதல்வன்’ திட்ட மாணவர்களுக்கான சிறந்த பயிற்சிக் களம்: இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் திறன்மிகு மையம் appeared first on Dinakaran.

Tags : India ,Center of Excellence ,Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை...